மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
புதுச்சேரியில் மாா்ச் 14-இல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மாசி மகத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மாா்ச் 14-ஆம் தேதியும், காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாா்ச் 13-ஆம் தேதியும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாசி திருவிழாவை முன்னிட்டு, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மாா்ச் 13-ஆம் தேதியும், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மாா்ச் 14-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எனினும், பொதுத்தோ்வுகள் அந்தந்த தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.