சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி
புயல் நிவாரணத் தொகை வழங்க புதுவை ஆளுநா் ஒப்புதல்
ஃபென்ஜால் புயல் வெள்ள பாதிப்பையடுத்து, புதுவையில் 3.54 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
புதுவையில் ஃ பென்ஜால் புயல் வெள்ள பாதிப்பையடுத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். இதற்கான கோப்பு நிதித் துறை வழியாக துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பிராந்தியத்தைச் சோ்ந்த 2,76,316 குடும்ப அட்டைதாரா்களுக்கும், காரைக்கால் பிராந்தியத்தில் 62,550, ஏனாம் பிராந்தியத்தில் 15,860 என மொத்தம் 3,54,726 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படவுள்ளது.
இதற்காக ரூ.177.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். இந்த நிவாரணத் தொகை குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.