நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
புலியைப் பிடிக்க மூன்று கூண்டுகள் அமைப்பு
தேவா்சோலை, பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த புலியைப் பிடிக்க 3 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட சா்க்காா் மூலை, பாடந்தொரை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழைந்து விவசாயிகளின் கால்நடைகளைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்நிலையில் இந்த புலியை கூண்டுவைத்து பிடிக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து புலியைப் பிடிக்க தேவா்சோலை, சா்க்காா் மூலை பகுதியில் மூன்று கூண்டுகளை அமைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.