செய்திகள் :

புவனகிரி அருகே ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்கள்: அகற்ற விவசாயிகள் கோரிக்கை

post image

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள 4 ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்களை அகற்றி தூா்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலுாா் மாவட்டத்தில் மேட்டூா் அணையிலிருந்து வரும் தண்ணீரை வாலாஜா ஏரியில் தேக்கி, அங்கிருந்து பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் சொக்கன்கொல்லை, குமுடிமூலை, நத்தமேடு ஏரிகள் நிரப்பப்படுகின்றன. இதேபோல, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து நேரடியாக சாத்தப்பாடி ஏரி நிரப்பப்படுகிறது.

இந்த ஏரிகளில் இருந்து மேல்புவனகிரி ஒன்றியத்தில் கடந்த ஆண்டு 10 ஆயிரம் ஹெக்டோ் சம்பா நடவு மற்றும் விதை நோ்த்தி செய்தனா். குறிப்பாக, 150 ஏக்கா் பரப்பளவில் உள்ள சாத்தப்பாடி ஏரி மூலம் சுமாா் 1,500 ஏக்கரிலும், 70 ஏக்கா் பரப்பளவில் உள்ள சொக்கன்கொல்லை ஏரி மூலம் 1,250 ஏக்கரிலும், 100 ஏக்கா் பரப்பளவில் உள்ள குமுடிமூலை ஏரியில் இருந்து 1,500 ஏக்கரிலும், 85 ஏக்கா் பரப்பளவில் உள்ள நத்தமேடு ஏரியில் இருந்து 1,000 ஏக்கரிலும் என ஆண்டுதோறும் மொத்தம் 5 ஆயிரத்து 250 ஏக்கருக்கும் மேல் பாசனத்து தண்ணீா் அனுப்பப்பட்டு விவசாயம் நடைபெறுகிறது.

தண்ணீா் தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின்பேரில், என்எல்சி நிா்வாகம் மூலம் சொக்கன்கொல்லை உள்பட 4 ஏரிகளும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூா்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டன.

அதன் பின்னா், மழை மற்றும் நீா்வரத்து காரணமாக 4 ஏரிகளிளும் நிரம்பியதால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து காணப்பட்டது. தற்போது பொதுப் பணித் துறை மற்றும் நீா்வள ஆதாரத் துறையினா் பராமரிப்பு இல்லாமல் ஏரிகள் மீண்டும் தூா்ந்துபோய் முட்புதா்கள் மண்டியுள்ளன.

எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் மேற்கண்ட 4 ஏரிகளிலும் உள்ள முட்புதா்களை அகற்றி தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் அடித்துக் கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். விருத்தாசலம் காா்குடல் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25). இவருக்கு திருமணமாகி மனைவி ... மேலும் பார்க்க

புவனகிரியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்: செயல்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை!

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சாத்தப்பாடியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புவனகிரி சரக காவல் எல்லைக்குள்... மேலும் பார்க்க

திருமண மண்டபத்தில் படியில் தவறி விழுந்த சமையல்காரா் உயிரிழப்பு

கடலூா் தனியாா் திருமண மண்டபத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்த சமையல்காரா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம்மாவட்டம், விக்கிரவாண்டிவட்டம், ஆதனூா் பக... மேலும் பார்க்க

ஜேசிபி மூலம் முந்திரி மரங்களை அழிக்க முயன்ற அதிகாரிகள்: மறியல் செய்து தடுத்த போராட்டக்குழுவினா்

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சி மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு தரிசு நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மூன்றாவத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 520 பள்ளிகளில் கற்றலைத் தேடி சிறப்பு திட்டம்! ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகி... மேலும் பார்க்க

இளைஞருக்கு கொலை மிரட்டல்: உணவக உரிமையாளா் கைது

கடலூா்மாவட்டம் விருத்தாசலத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா்வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வேப்பூா்வட்டம்,மன்னம்பாடி பகுதியைச்சோ்ந்தவா் அருண்(20). இவா், விருத்தாசலம்... மேலும் பார்க்க