செய்திகள் :

பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு 16,500 கன அடியாக அதிகரிப்பு!

post image

திருவள்ளூர்: திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையால் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் வெள்ளிக்கிழமை உபரிநீர் 16,500 கன அடி அதிகரித்துள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருபுறமும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளர் இரா.அருண்மொழி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டப்பகுதிகளில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதில் முக்கியமான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீர், கிருஷ்ணா நீர் வரத்து ஆதாரமாகும். பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 34.99 உயரமும், 3,041 மில்லியன் கன அடியாகவும் மற்றும் பூண்டியின் நீர் வரத்து 9,890 கன அடியாக உள்ளது.

தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக உள்ளதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் வினாடிக்கு 5,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி அளவில் வினாக்கு 12,000 கன அடியாக உபரி நீர்வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்தும் வரும் மழை மற்றம் கிருஷ்ணா கால்வாய் மூலம் 501.19 கன அடி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது உபரிநீர் வெளியேற்றம் 16,500 கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்! தென்காசி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்

எனவே நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆற்றறம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறைறயூர், பீமன்தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைபாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நரப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் தாழ்வான பகுதிகளில் வசித்து வருவோர் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரித்துள்ளனர்.

இதேபோல் புழல் ஏரி 19.20 அடி உயரமும், 3300 மில்லியன் கன அடிநீர் கொள்ளளவு கொண்டதாகும். எனவே வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 19.72 அடி உயரமும், 2956 மில்லியன் கன அடிநீர் இருப்பும் உள்ளன. மேலும், மழை நீர் வரத்து 1100 கன அடியாக உள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி முதல் கட்டமாக காலை 500 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

அதனால், கரையோர கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிரான்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசித்து வருவோர் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்கமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதேபோல் சோழவரம் ஏரியில் 1,081 மில்லியன் கன அடியில், 0.282 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.500 மில்லியன் கன அடியில், 0.332 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது என கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளர் இரா.அருண்மொழி தெரிவித்தார்.

மழை அளவு: திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மி.மீட்டரில் மழை அளவு விவரம்

ஆவடி-221, திருத்தணி-194, பூந்தமல்லி-180.50, ஜமீன்கொரட்டூர்-162, திருவள்ளூர்-151.50, திருவாலங்காடு-150, கும்மிடிப்பூண்டி-112, ஊத்துக்கோட்டை-103, பூண்டி-102, பள்ளிப்பட்டு-102, ஆர்.கே.பேட்டை-92, செங்குன்றம்-94.20, தாமரைபாக்கம்-76, சோழவரம்-46.80, பொன்னேரி-34 என மொத்தம்- 1821.40 மி.மீட்டரும், சராசரியாக 121.40 மி.மீட்டரும் என மழை பதிவாகியுள்ளது.

முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 6 பேர் பலி!

ஜோர்டான்: தலைநகர் அம்மானில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 முதியவர்கள் பலியானார்கள். மேலும், 60 பேருக்கு தீக்காயம் எற்பட்டுள்ளது.அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லத்தில் சுமார் 111 முதியவர்கள் வ... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பாமகவினர் சாலை மறியல்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாமகவினர் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: கேரள அரசு அனுமதி!

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றுமுல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காககட்டுமானப் பொருள்களை எடுத்து செல்லகேரள அரசின் வனத்துறை அனுமதிஅளித்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது தொடர்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெள்ளிக்கிழமை பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே தாதமரைக்குளம்... மேலும் பார்க்க

ஓடிடியில் ஹிட் லிஸ்ட்!

விஜய் கனிஷ்கா - சரத்குமார் நடிப்பில் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமான படம் ‘ஹிட் லிஸ்ட்’. இந்த படத்தை சூர்யகதிர், கே. கார்த்திக... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகர... மேலும் பார்க்க