பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
பெங்களூரு: மாடித்தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு; பேஸ்புக்கில் வீடியோ பதிவு - தம்பதியை கைதுசெய்த போலீஸ்!
பெங்களூரு சதாசிவ்நகர் நகரில் வசிப்பவர் ஊர்மிளா. இவரது கணவர் சாகர். சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த இத்தம்பதி சோசியல் மீடியாவில் பிரபலம் ஆகும். சாகர் அங்கு உ ணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஊர்மிளா அடிக்கடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இத்தம்பதி தாங்கள் தங்கி இருக்கும் வீட்டின் மாடியில் செடிகளை வளர்த்து வருகின்றனர். அந்த செடிகளை வீடியோ எடுத்து ஊர்மிளா வெளியிட்டு இருந்தார். அதில் இரண்டு தொட்டியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது. அச்செடிகளை பார்த்த நெட்டிசன்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். சிலர் இது குறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் ஊர்மிளாவின் வீட்டிற்கு ரெய்டுக்காக வந்தனர்.
அத்தம்பதியிடம் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது குறித்து விசாரித்த போது தங்களது வீட்டில் அது போன்ற செடிகள் எதுவும் கிடையாது என்று தெரிவித்தனர். அதில் நம்பிக்கை வராத போலீஸார் மாடியில் இருந்த தோட்டத்தை சோதனையிட்டனர். மாடித்தோட்டத்தில் இருந்த 17 பூந்தொட்டியில் இரண்டு பூந்தொட்டிகள் காலி செய்யப்பட்டு இருந்தது. அதில் வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீஸார் அத்தம்பதியிடம் தீவிரமாக விசாரித்தபோது கஞ்சா செடிகள் வளர்த்ததை ஒப்புக்கொண்டனர். போலீஸார் வருவதை தெரிந்து கொண்டு உடனே கஞ்சா இருந்த பூந்தொட்டிகளை காலி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.