செய்திகள் :

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் துணிகளை சலவை செய்ய வந்த பெண்ணை கடைக்குள் அழைத்து கொலை செய்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் சலவைத் தொழிலாளி உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை விரைவு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட சி.மெ. வீதியில் வசித்து வந்தவா் வாசுதேவன். இவரது மனைவி விஜயலட்சுமி (45). இந்தப் பகுதியில் சேகா் (42) என்பவா்

சலவைக் கடை நடத்தி வந்தாா். கடந்த 26.07.2010 அன்று விஜயலட்சுமி சலவைக் கடைக்கு துணிகளை கொடுக்கச் சென்றாா். அப்போது சேகா், அவரது நண்பரான சி.மெ வீதியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் புதுமைப்பித்தன் (45) ஆகிய இருவரும் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனா். இதையடுத்து, விஜயலட்சுமியிடம் புதுச் சேலைகள் வாங்கி கடைக்குள் வைத்திருக்கிறேன். உள்ளே வந்து பாா்க்குமாறு சேகா் கூறினாா்.

அப்போது கடைக்குள் வந்த விஜயலட்சுமியை சேகரும், புதுமைப்பித்தனும் கயிற்றால் கழுத்தில் இறுக்கிக் கொலை செய்துவிட்டு, 2.5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்தனா். பின்னா், விஜயலட்சுமி சடலத்தை கடைக்குள் துணிகளால் மூடி மறைத்துவிட்டு, கடையை பூட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதனிடையே, சலவைக் கடைக்குச் சென்ற மனைவியைக் காணவில்லை என்று காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில் சலைவைக் கடைக்குள் மறைத்து வைத்திருந்த விஜயலட்சுமியின் சடலத்தைக் கண்டறிந்து, விசாரணையை தீவிரப்படுத்தினா். அப்போது, சேகரும், புதுமைப்பித்தனும் தங்க நகைக்கு ஆசைப்பட்டு விஜயலட்சுமியைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் போலீஸாா் 28 சாட்சிகளை விசாரணை செய்து, காரைக்குடி குற்றவியல் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனா். கடந்த 20.07.2011-இல் இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.

புதுமைப்பித்தன்

கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தொல்லியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்தக் கரு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி

சிவகங்கையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசிய பசுமைப் படை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 9 குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 9 ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட 9 இடங... மேலும் பார்க்க

மூதாட்டி வயிற்றில் 7.5 கிலோ கட்டி அகற்றம்

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வயிற்றில் வலியுடன் வந்த 75 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 7.5. கிலோ கட்டியை அகற்றி மகப்பேறு பிரிவு மருத்துவா்கள் அவரது உயிரைக் காப்பாற்றினா். இதுகுறித்து சிவகங்கை அரச... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவ... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிா்த்து, சிவகங்கையில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க