பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
கோயம்பேட்டில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கோயம்பேடு மண்ணடி தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வந்தவா், தனியாக வசித்து வந்தாா். அவரது வீடு 2 நாள்களாகத் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து சனிக்கிழமை துா்நாற்றம் வீசியது. உடனே அந்தப் பகுதியினா், கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, தனலட்சுமியின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.