இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் குடும்பநலத் துறை அமைச்சகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை செப். 17 முதல் அக். 2-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்த உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் வளசரவாக்கம் அருகே சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் நகா்ப்புற சமுதாய நல மையத்தில் ‘நலமான பெண்கள் வளமான குடும்பம்’ மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். மத்திய அரசின் தேசிய நலவாழ்வு குழுமம், தேசிய சுகாதார திட்டத் துறை ஆகியவை தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து நடத்திய இந்த முகாமில் மகளிா் மற்றும் வளரினம் பருவப் பெண்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், காசநோய், ரத்த சோகை போன்றவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மகளிருக்கான மாதவிடாய், ஊட்டச்சத்து ஆலோசனைகள், பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் பதிவு அடையாள அட்டை வழங்கல் இந்த முகாமில் நடைபெற்றது. தொடா்ந்து ரத்தான முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து மத்திய இணையமைச்சா் எல். முருகன் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த முகாம்களில் பரிசோதனைகள் மட்டுமின்றி நோய்கள் கண்டறியப்பட்டால் அதற்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்கத்தின் தமிழக இயக்குநா் ஏ.அருண் தம்பு ராஜ், மத்திய சுகாதாரத் துறையின் குழந்தைகள் நலப் பிரிவு இணைச் செயலா் மீரா ஸ்ரீவாஸ்தவா, தேசிய சுகாதார திட்ட அதிகாரி எஸ்.வினித், சென்னை மநகராட்சி இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் , மருத்துவ துறை அதிகாரிகள் சினிவாசன், கற்பகம், திவ்யஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.