செய்திகள் :

பெண்ணாக உணரும் மோகன் லாலின் வைரல் வீடியோ.. ``இதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும்" - குஷ்பு பாராட்டு

post image

மலையாளத்தில் மாஸுக்கும், நடிப்புக்கும் பெயர்போன நடிகர் மோகன் லால். ஒருபக்கம் ரசிகர்களைப் புல்லரிக்க வைக்கும் மாஸான திரைப்படங்கள், மறுபக்கம் நடிப்பின் உச்சத்தைக் காட்டும் வகையிலான திரைப்படங்கள் என மனங்களைக் கவர்ந்து வருகிறார்.

திரைப்படத்தில்தான் தனது நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார் என்றால், இப்போது 60 நொடிகள் விளம்பரத்திலும் நடிப்பால் மனங்களைக் கவர்ந்திருக்கிறார்.

நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் மோகன் லால், அந்த விளம்பரத்தில் கவர்ச்சியாக ஜொலிக்கும் நகையைக் கண்டு ஆணே, பெண்ணாகப் பிறந்திருக்கலோமோ என உணர்வதுபோல கண்ணாடி முன் அந்நகையை அணிந்து அழகு பார்ப்பதுபோல அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பெண்ணாக உணரும் மோகன் லாலின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் மோகன் லால், தயக்கமின்றி பெண்ணைப் போல பாவம் செய்து விளம்பரத்தில் நடித்திருப்பதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை குஷ்பு, "என்னவொரு அற்புதமான விளம்பரம். இந்தமாதிரியான விளம்பரத்தில் நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும். நம் மோகன் லால் அதை தைரியமாகச் செய்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிலும் உள்ள இயற்கையான பெண்மையை ஏற்றுக்கொள்வது மிகவும் சிறப்பாக வெளிப்படுகிறது. இப்படியான அற்புதமான நடிப்பை உங்களால்தான் செய்ய முடியும். இந்த விளம்பரத்தை எடுத்திருக்கும் பிரகாஷ் வர்மாவிற்கு பாராட்டுகள்." என்று எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

மோகன் லாலின் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

`உண்மை ஒருநாள் வெளிவரும்' - தொடர் சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கும் நடிகர் நிவின் பாலி விளக்கம்!

தொடர் சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கி வரும் நடிகர் நிவின் பாலி, தன் மீது போடப்பட்டிருக்கும் பணமோசடி வழக்குக் குறித்து விளக்கமளித்திருக்கிறார்.இவர் 2009-ம் ஆண்டு 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' திரைப்படம் மூலம... மேலும் பார்க்க

BALTI: `Alphonse Puthren Reloaded' ஷேன் நிகம் படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்

மலையாள நடிகர் ஷேன் நிகமின் 25வது படமான பல்டி, பரபரப்பாகத் தயாராகி வருகிறது. உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்யராஜ் நடிப்பது உறுதி செய்யப்பட்டி... மேலும் பார்க்க

Soubin Shahir: ``என்னை யாரும் கைது செய்யவில்லை; என் பக்கம் நியாயம் இருக்கிறது'' - சௌபின் சாஹிர்

சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், சந்து சலீம்குமார், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'மஞ்சும்மல... மேலும் பார்க்க

பாலா: "யாருக்காவது நல்லது செய்யணும்" - லாட்டரி வென்ற மனைவி; கொண்டாடிய அஜித் பட நடிகர்!

மலையாள நடிகர் பாலா தனது மனைவியான கோகிலா காருண்யா லட்டரியில் 25,000 ரூபாய் வென்றதை சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு கொண்டாடியுள்ளார். அவருடைய லாட்டரி டிக்கெட் எண் 4935 என்பதைக் காண்பித்து, வீடியோ ... மேலும் பார்க்க

'ப்ரேமலு 2' நிறுத்திவைப்பு! - பகத் பாசில் தயாரிப்பில் நிவின் பாலியை இயக்கும் 'ப்ரேமலு' இயக்குநர்!

கடந்தாண்டு மலையாளத்தில் வெளியாகியிருந்த 'ப்ரேமலு' திரைப்படம் கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் இப்படியான பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவிப்பு வெள... மேலும் பார்க்க

பல்டி: மலையாள சினிமாவில் 'சாய் அபயங்கர்' என்ட்ரி - மோகன்லால் வரவேற்பு!

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகிவரும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் பல்டி. வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. ஏற்கெனவே இந்த திரைப்படத்துக்கு நிலவும் பெர... மேலும் பார்க்க