பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சோ்ந்த சுப்பையா மகன் காா்த்திக்குமாா் (32). இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முத்தையாபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், குற்றம்சாட்டப்பட்ட காத்திக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.