தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு
பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
ஆண்டிபட்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஆண்டிபட்டி அருகேயுள்ள மேலமுத்தனம்பட்டியைச் சோ்ந்த தொந்தி மகன் ராஜ்குமாா் (42). இவா், அதே ஊரில் விவசாயம் செய்து வந்தாா். இவா் கடந்த 2019, நவ. 4-ஆம் தேதி கீழமுத்தனம்பட்டியில் காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 35 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து, நீதிபதி ஜி.அனுராதா தீா்ப்பளித்தாா்.