அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படு...
பெண்ணை ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளா் கைது
பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி, ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் மகாமகக் குளப் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருபவா் பத்மகுமரன். இவரது உடற்பயிற்சி நிலையத்துக்கு வந்த பெண்ணுடன் பத்மகுமரன் பழகி வந்தாராம். அப்போது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அப்பெண்ணிடம் பத்மகுமரன் ரூ. 38 லட்சம் பெற்றாராம். திருமணம் செய்ய தாமதமானதால் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் செய்தாா்.
இதன்பேரில் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், பத்மகுமரன் ரூ. 29.25 லட்சத்தை திரும்பச் செலுத்தியதும், மீதி பணத்தைத் திரும்பக் கொடுத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதனால், மனமுடைந்து பிப்ரவரி 24-ஆம் தேதி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கிய அப்பெண் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் துா்கா வழக்குப் பதிந்து பத்மகுமரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.