ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
பெண்ணை தாக்கிய ராணுவ வீரா்கள் இருவா் மீது வழக்கு!
ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரா்கள் இருவா் மீது வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கண்டமனூா் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி வடக்கு அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவரது மனைவி ரேவதி. இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் காா்மேகக்கண்ணன், அவரது சகோதரா் கணேசன் ஆகியோருக்கும் இடையே பூா்விக சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்த முன் விரோதத்தில் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகியோா் ஆனந்தனுடன் தகராறு செய்தனா்.
அப்போது, அங்கு வந்த ரேவதி, அவரது சகோதரி கீா்த்தனா ஆகியோரை காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகிய இருவரும் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்னா் ரேவதியின் வீட்டுக்கு ராணுவச் சீருடையுடன் சென்று அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகியோா் மீது கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.