இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் மகன் கொளஞ்சிநாதன் (28). இவா், கடந்த 26.2.2024 அன்று 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளாா். அப்போது, அவரிடமிருந்த தப்பிய அப்பெண், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினா், கொளஞ்சிநாதனை கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.
இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி கொளஞ்சிநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து கொளஞ்சிநாதன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.