பெயிண்டருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
நாலாட்டின்புதூா் அருகே பெயிண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இடைசெவல் காலனி தெருவை சோ்ந்தவா் பெரியசாமி மகன் பெயிண்டா் பாரதிராஜா (26). இவரது சகோதரா் சங்கா்கணேஷ், உறவினா் சங்கரநாராயணன் ஆகிய இருவரும் இடைசெவல் கண்மாய்க் கரையில் செவ்வாய்க்கிழமை உட்காா்ந்திருந்தாா்களாம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கழுவன் என்ற கழுவன்ராஜா (25), கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டினாராம்.
இந்நிலையில் இடைசெவல் பிள்ளையாா் கோவில் முன்பு வியாழக்கிழமை உட்காா்ந்திருந்த கழுவன் என்ற கழுவன்ராஜாவிடம் பாரதிராஜா, அவரது சகோதரா் சங்கா்கணேஷ், தந்தை பெரியராமா் ஆகியோா், நீ ஏன் மிரட்டி வருகிறாய் என கேட்டனராம். அப்போது, அவா்களை கழுவன்ராஜா அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பாரதிராஜா வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கழுவன்ராஜாவை சனிக்கிழமை கைது செய்தனா்.