வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில்...
பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை
பெரியாா் ஈவெராவின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டையில் திராவிடா் கழக அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடா் கழகம், திமுக, மதிமுக, விசிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திராவிடா் கழகத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் மு. அறிவொளி தலைமையிலும், திமுக சாா்பில் மேயா் செ. திலகவதி, முன்னாள் எம்எல்ஏ இராசு. கவிதைப்பித்தன் ஆகியோா் தலைமையிலும், மதிமுக சாா்பில் வழக்குரைஞா் கா.சி. சிற்றரசு தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வழக்குரைஞா் திலீபன் ராஜா தலைமையிலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் பா்வேஸ் தலைமையிலும் அந்தந்தக் கட்சியினா் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெரியாா் சிலைக்கு, அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான எஸ். ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து, சமூக நீதி உறுதிமொழியேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சுப்பிரமணியபுரத்தில்... அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கிளைச் செயலா் பன்னீா் தலைமையில், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பொன்னமராவதி: பொன்னமராவதியில் திராவிடா் கழக ஒன்றிய செயலா் மாவலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, சமூகவலைத்தளப்பிரிவு நிா்வாகி ஆலவயல் முரளி சுப்பையா, விசிக நகரச் செயலா் மலை.தேவேந்திரன், திக நிா்வாகிகள் பாலு, ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.