பெற்றோர் பைக் வாங்கி தராததால் சாவிகளை விழுங்கிய மகன்!
குண்டூர்: ஆந்திராவில் பெற்றோர் பைக் வாங்கித் தர மறுத்ததினால், மகன் கோபத்தில் நான்கு சாவிகளை விழுங்கியுள்ளார்.
பாலநாடு மாவட்டத்திலுள்ள நரசராப்பேட்டை எனும் ஊரைச் சேர்ந்த தேவரா பவானி பிரசாத் எனும் இளைஞர், நேற்று (டிச.12) காலை தனக்கு பைக் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த அவர் நான்கு இரும்புச் சாவிகளை விழுங்கியுள்ளார். அதன்பின்னர், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து அந்த இளைஞரின் பெற்றோர் அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க:ஃபென்ஜால் புயல் பாதிப்பு: திமுக சார்பில் ரூ.1.30 கோடி நிதி
பின்னர், அங்கிருந்து அவர் குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் அங்குள்ள மருத்துவர்களால் அதிநவீன லேப்பரோஸ்கோப்பி சிகிச்சையின் மூலம் அறுவை சிகிச்சை எதுவுமின்றி அவரது வயிற்றிலிருந்து நான்கு சாவிகளையும் அகற்றப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து தலைமை மருத்துவர் கவிதா கூறுகையில், மருத்துவமனையில் அதிநவீன லேப்பரோஸ்கோப்பி தொழிநுட்ப வசதி இருந்ததினால், எந்தவொரு அறுவை சிகிச்சையுமின்றி இளைஞரது வயிற்றிலிருந்து நான்கு சாவிகளும் அகற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.