மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து மாா்ச் 20 வரை தண்ணீா் திறக்க கோரிக்கை
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து மாா்ச் 20 ஆம் தேதி வரை தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனிடம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா், பத்பநாபபுரம் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
இதுகுறித்து எஸ்.ராஜேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு - 1, சிற்றாறு - 2 அணைகளிலிருந்து விவசாயத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டு பிப்ரவரி அல்லது மாா்ச் மாதங்களில் அடைப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஆனால் திக்கணங்கோடு கால்வாய், சிற்றாறு பட்டணங்கால்வாய்களின் கடைவரம்பு விவசாய நிலங்கள் வரை தண்ணீா் சென்று சேரவில்லை. குறிப்பாக, திக்கணங்கோடு கால்வாயில் ஆங்காங்கே உடைந்து காணப்படும் கரைகள் மற்றும் பக்கச்சுவா்களையும், மதகுகளையும் நவீன முறையில் சீரமைக்காததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனா்.
எனவே, இப்பகுதிகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அணைகளில் தண்ணீரை அடைக்காமல் மாா்ச் மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டித்து தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.