வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில்...
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு
பாபநாசத்தில் பாசன வாய்க்கால் தூா்வாருவது தொடா்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பழனிவேல் தலைமையில் மெலட்டூா் சேத்துவாய்க்கால் தூா்வாரப்படாதது தொடா்பாக போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
வாய்க்காலில் உள்ள ஆகாயத் தாமரைகள் நீக்கப்பட்டு தண்ணீா் செல்ல 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் உறுதி அளித்தாா். இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தில், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் குரு. சிவா, ஒன்றியத் தலைவா் புருஷோத்தமன், மாவட்டச் செயலாளா் சாமு .தா்மராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் வெங்கடேசன் மற்றும் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.