பேருந்தில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு
ஆண்டிபட்டியிலிருந்து தேனிக்குச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பையைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவி அழகுத்தாய் (54). இவா், ஆண்டிபட்டியிலிருந்து தேனிக்கு அரசுப் பேருந்தில் சென்றாா். குன்னூா் அருகே பேருந்து சென்றபோது, அழகுத்தாய் பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.