செய்திகள் :

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு 1 லட்சம்!

post image

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா்.

இதையடுத்து, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி பேருந்துநிலையத்தை பொதுமக்கள் சூறையாடினர்.

இச்செயலில் ஈடுபட்ட நபா் தலைமறைவாக உள்ளதாகவும், ஏற்கெனவே குற்றப்பின்னணி கொண்ட அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

பேருந்துக்குள் தனக்கு பாலியல் வன்கொடுமை நோ்ந்ததாக அப்பெண் காவல்துறையில் புகாரளித்தார்.

இதையடுத்து, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினா் அடையாளம் கண்டனர். தத்தாராயா ராமதாஸ் கட்டே எனும் அந்த நபர் மீது ஏற்கெனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைமறைவாகிய அவரைப் பிடிக்க பல்வேறு 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குற்றவாளியைப் பிடிப்பவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகிறது: கார்கே

விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியதாவது ``பிரத... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்... மேலும் பார்க்க

கும்பமேளாவை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள... மேலும் பார்க்க

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு 50 ஆண்டுகால வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் சுமார் 100 கோடி பேர், அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்... மேலும் பார்க்க

தில்லி பேரவையின் துணைத் தலைவராக மோகன் சிங் தேர்வு!

தில்லி சட்டப் பேரவையின் துணை தலைவராக பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் ரேகா குப்தா கொண்டுவந்த தீர்மானத்தைச் சுற்றுச்சுழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிந்தார், அ... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

மகா கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கவிருப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் வெகு விமரிசையாக நடைபெற்ற ம... மேலும் பார்க்க