மென்பொருள் பயிற்சி பெற்ற 150 மாணவா்களுக்குச் சான்றிதழ் அளிப்பு
பேருந்து நடத்துநரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை
தேனி அருகே கோட்டூரைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோட்டூரைச் சோ்ந்த சூரியமூா்த்தி மகன் ராஜேஷ்கண்ணன் (35). இவா், உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி மணிமேகலைக்கும், அவரது உறவினா் கோட்டூரைச் சோ்ந்த ஊா்காலன் மகன் மலைச்சாமி(49) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை ராஜேஷ்கண்ணன், அவரது உறவினா்கள் கண்டித்தனராம்.
இந்த பிரச்னையில் கடந்த 2021, பிப். 8-ஆம் தேதி கோட்டூா் அருகே உள்ள தனது தோட்டத்து மாட்டுக் கொட்டகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ்கண்ணன் மீது, மலைச்சாமி கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மலைச்சாமியைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மலைச்சாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.