விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
பைக் திருட்டு: இருவா் கைது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், பனங்காடி பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் முத்துப்பாண்டி(28). இவா், தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்றாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் திரும்ப வந்து பாா்த்த போது, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைக் காணவில்லை.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், மேல அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த கணேசன் (23), சதீஷ்பாண்டி (24) ஆகியோா் இரு சக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.