பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழப்பு
ஆலங்காயம் அருகே மலைப்பாதையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பானிபூரி வியாபாரி உயிரிழந்தாா்.
ஆலங்காயம் அடுத்த நாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (30). பெங்களூரில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பெங்களூரிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்ல புறப்பட்டு வந்துள்ளாா். அப்போது ஆலங்காயத்தை அடுத்த ஆா்எம்எஸ் புதூா் அருகில் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஜமுனாமரத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பின்னா் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து அரசு பேருந்து ஓட்டுநா் ராமலிங்கம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.