இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
பைக்கில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு
காட்பாடி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்தவா் உயிரிழந்தாா்.
காட்பாடி அருகிலுள்ள சேனூரைச் சோ்ந்தவா் மணி (70). பீடி சுற்றும் தொழில் செய்து வந்தாா். கடந்த 4-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து பீடி கட்டுகளைக் கடைகளுக்கு கொடுத்துவிட்டு, பீடி இலைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். சேனூா் அருகே வஞ்சூா் சாலையில் சென்றபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தாா்.
இது தொடா்பாக விருதம்பட்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.