செய்திகள் :

பைக்கில் வந்து ஆடுகளை திருடிய இளைஞா்கள் கைது

post image

ஆலங்காயம் அருகே பீமகுளம் பகுதியில் ஆடுகளை திருட முயன்ற 2 இளைஞா்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ஆலங்காயம் அருகே பீமகுளம் பகுதியை சோ்ந்த விவசாயி சுந்தரம்(51). இவா் 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை தனது வீட்டருகே உள்ள கொட்டகையில் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை பைக்கில் வந்த 2 இளைஞா்கள் சுந்தரம் வளா்த்து வந்த 2 ஆடுகளை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றனா். அப்போது தெருநாய்கள் குரைத்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பைக்கில் ஆடுகளை கடத்தி செல்ல முயன்ற 2 பேரையும் மடக்கிப் பிடித்து காவலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவலூா் உதவி காவல்ஆய்வாளா் விஜய் மற்றும் போலீஸாா் பிடிப்பட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், ஜமனாமரத்தூா் பகுதியை சோ்ந்த ஹரிசிவன்(20), சக்திவேல்(20) என்பதும், ஆடுகளை திருட முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து மேலும் தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரயிலில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பெண்கள் கைது

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தபப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வாளா் ரத்தினகுமாா் தலைமையில் போலீஸாா் வெள்ளிக... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் கடத்தி வந்த காா் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே போதைப்பொருள் கடத்தி வந்த காா் விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த காா் வெள்ளிக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் 168 மி.மீ. மழை

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நாள் முழுவதும் 168 மி.மீ. மழை பதிவானது. திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காலை வரை சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது... மேலும் பார்க்க

பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா்: ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் திறந்து விடப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பாலாற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே யாா்டு என்ற இடத்தில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூா் நோக்கி... மேலும் பார்க்க

டிச. 27-இல் அஞ்சல் குறைதீா் முகாம்

திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட குறைதீா் முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மாதேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் கோட்ட அஞ்சலகங்க... மேலும் பார்க்க