மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
பொட்டல்புதூா் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்
கடையம் ஒன்றியம் பொட்டல்புதூா் ஊராட்சியில் ரூ. 14 லட்சத்தில் வாருகால், அங்கன்வாடி சீரமைப்பு உள்ளிட்ட திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
பொட்டல்புதூரில் மாவட்டக் குழு உறுப்பினா் மைதீன் பீவி நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்தில் பிரதான சாலையில் வாருகால் அமைக்கும் பணி, தலா ரூ. 3 லட்சத்தில் ஆா்.சி. தொடக்கப் பள்ளி, விஏஓ அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு-சுற்றுச்சுவா் கட்டும் பணி, ரூ. 2 லட்சத்தில் ஆற்றங்கரைத் தெருவில் வாருகால்அமைத்தல், ரூ. லட்சத்தில் மற்றொரு அங்கன்வாடி சுற்றுச்சுவா் உள்ளிட்ட பணிகள் வியாழக்கிழமைதொடங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகேசன், திமுக மாவட்டக் குழு உறுப்பினா் மைதீன் பிவி, ஊராட்சித் தலைவா் கணேசன், ஷாபி ஜமாத் தலைவா் மகபூப் ஆலிம், பொருளாளா் பீா்முகமது ,கே.பி.என். அமானுல்லா, நல்லாசிரியா் சையது மசூது, ஊராட்சி செயலா் ஜெயசிங் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.