பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயா்த்தக் கோரி தீா்மானம்
பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்படடது.
பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு உறுப்பினா் க.ராசு தலைமைவகித்தாா். மாவட்டச் செயலா் த.செங்கோடன், மாவட்டக் குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், பொன்னமராவதியில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். பொன்னமராவதி பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் உள்ள வாரச்சந்தைக் கூடத்தை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்கவேண்டும்.
வேகுப்பட்டி பிரிவு சாலை மற்றும் அமரகண்டான் தென்கரை சாலையில் ரவுண்டானா அமைக்கவேண்டும். பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அ.ராசு, பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றியக்குழு உறுப்பினா் மெய்யப்பன் நன்றி கூறினாா்.