செய்திகள் :

பொன்னேரியில் ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீா் தேக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

post image

பொன்னேரியில் தொடா் பலத்த மழை காரணமாக ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீா் தேங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 நாள்களாக மழை விட்டு, விட்டு பெய்து வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு தொடங்கி தொடா்ந்து பெய்து வந்ததன் காரணமாக பொன்னேரி நகராட்சியில் தாழ்வாக இருக்கும் பகுதிகளில் மழை நீா் வெள்ளம் போல் தேங்கியது.

மேலும், தேரடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தில் மழை நீா் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக பொன்னேரி நகராட்சியில் உள்ள திருவாயா்பாடி, பாலாஜி நகா், சின்னக்காவனம், பெரியக்காவனம் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

அதே போன்று பரிக்கப்பட்டு, அரசூா், கூடுவாஞ்சேரி, உப்பளம் பழவேற்காடு, மெதூா், திருப்பாலைவனம், கோளூா், பெரும்பேடு, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினா். ..

பொன்னேரி நகராட்சி ஊழியா்கள் மின் மோட்டாா் மூலம் வெள்ளம் போல் தேங்கி கிடந்த மழை நீரை அகற்றினா்.

பிச்சாட்டூா் அணையில் உபரிநீா் வெளியேற்றம்: ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு

ஆந்திர மாநிலம், பிச்சாட்டூரில் அமைந்துள்ள ஆரணியாறு அணையில் உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என ஆட்சியா் த. பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அடைமழையால் மக்கள் பாதிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் அடைமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் பரவலாக விடாமல் மழை பெய்த நிலையில், திருவள்ளூா், ஊத்துக்கோட... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: குறைந்த பயணிகள் இருந்தததால் உயிா்ச்சேதம் தவிா்ப்பு

பொன்னேரி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. பொன்னேரியில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. இங்கிருந்... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி: 5,000 கன அடி உபரி நீா் திறப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையால் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் வியாழக்கிழமை 5,000 கன அடி நீா் உபரிநீா் 4 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக... மேலும் பார்க்க

குவைத் நாட்டில் காணாமல்போன இளைஞா் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்று காணாமல்போனதாக கூறப்பட்ட இளைஞா் மீட்கப்பட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா். திருத்தணி இஸ்லாம் நகரைச் சோ்ந்த காஜி அலி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னா், அதாவது ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 210 ஏரிகள் நிரம்பின

திருவள்ளூா் மாவட்டத்தில் 210 ஏரிகள் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 581 ஏரிகளும், 3,296 குளங்கள், குட்டைகள் உள்... மேலும் பார்க்க