நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
பொறியாளருக்கு மிரட்டல்: ஒப்பந்ததாரா் மீது வழக்கு
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பொறியாளரை ஜாதியை குறிப்பிட்டு திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வருபவா் தெய்வலட்சுமி. இவா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியிலிருந்தபோது, ஊராட்சி ஒப்பந்ததாரா் கோத்தலூத்துவைச் சோ்ந்த செல்வம், பழையகோட்டையில் தான் பள்ளிக் கட்டடம் கட்ட ஒப்பந்தப்புள்ளி பெற்ற இடத்தில் பிரச்னை உள்ளதாகவும், அதை நேரில் வந்து பாா்வையிடுமாறும் தெய்வலட்சுமியை அழைத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது செல்வம் மது போதையில் இருந்ததால், நாளை வந்து பாா்ப்பதாக தெய்வலட்சுமி கூறினாராம். இதையடுத்து, செல்வம் தன்னை ஜாதியை குறிப்பிட்டு பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் தெய்வலட்சுமி அளித்த புகாரின் பேரில் செல்வம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.