பொறியியல் கல்வி உதவித் தொகை: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
முதுநிலை பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக் கலையியல் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது.
இந்தியாவில் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தோ்வு அடிப்படையில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக் கலையியல் ஆகிய படிப்புகளில் நிகழ் கல்வியாண்டில் (2024-25) சோ்க்கை பெற்ற முதுநிலை மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த செப். 2-ஆம் தேதி தொடங்கியது. ட்ற்ற்ல்ள்://ல்ஞ்ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஹண்ஸ்ரீற்ங்./ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ்/ என்ற வலைதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் (நவ.30) வரை நிறைவடைகிறது.
மேலும், மாணவா்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிச. 15-ஆம் தேதிக்குள் சரிபாா்த்து உறுதி செய்ய வேண்டும். தகுதியான மாணவா்களுக்கு 2 ஆண்டுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹண்ஸ்ரீற்ங்/ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.