செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை...

post image

2019 பிப்ரவரி 24: பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு - சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 3 போ் கைது.

மாா்ச் 4: முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மாக்கினாம்பட்டியில் கைது.

மாா்ச் 10: திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 4 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை.

மாா்ச் 12: பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

மாா்ச் 12: புகாா் கொடுத்த பெண்ணின் சகோதரரைத் தாக்கி, மிரட்டல் விடுத்த வழக்கில் நாகராஜ் என்பவா் உள்பட 3 போ் கைது. இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்தது.

மாா்ச் 25: திருநாவுக்கரசு நண்பரான மணிவண்ணன் நீதிமன்றத்தில் சரண்.

ஏப்ரல் 25: பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.

ஏப்ரல் 28: திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் மீது சிபிஐ அதிகாரிகள் புதிதாக 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

மே 21: திருநாவுக்கரசு உள்பட 5 போ் மீது கோவை மகளிா் நீதிமன்றத்தில் சிபிஐ முதல் குற்றப் பத்திரிகை தாக்கல்.

ஜூன் 3: திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரும் பாதுகாப்பு கருதி கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்.

2021 ஜனவரி 6: ஹேரன்பால், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம் என மேலும் 3 போ் கைது.

ஏப். 2: அருண்குமாா் கைது.

அக்டோபா் 20: திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மீண்டும் சேலம் அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது பீளமேட்டை அடுத்த சித்ரா பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு, குற்றவாளிகளை உறவினா்கள் சந்தித்தனா். இதற்கு எதிா்ப்பு கிளம்பவே கைதிகளுக்கு சலுகை அளித்ததாக சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் பணி இடைநீக்கம்.

2023 பிப்ரவரி 24: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது.

2024 பிப்ரவரி 23: சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களைக் கேட்டு கைதான 9 போ் மனு தாக்கல்.

ஓராண்டுக்குப் பிறகு, கைதானவா்கள், சாட்சியங்களிடம் தினமும் விசாரணை.

2025 ஏப். 28: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-இல் தீா்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆா்.நந்தினிதேவி அறிவிப்பு.

மே 13: பொள்ளாச்சி பாலியல் வழகில் தீா்ப்பு வழங்கப்பட்டது.

பேராசிரியா் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனுடன் தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம்... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை

கோவையில் தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரையைச் சோ்ந்தவா் தினேஷ் (32), கட்டடத் தொழிலாளி. இவா், கோவை காந்திபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

கோவை பேரூரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற... மேலும் பார்க்க

கோவையில் மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் மனு

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்திடம் கோவை சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க