வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!
போக்ஸோவில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பதிவு
திருப்பத்தூா் அருகே போக்ஸோவில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் காங்கனைக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (28). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். அதில் சிறுமி 2 மாத கா்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, அவருடைய தாயாா் அளித்த புகாரின்பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி ஜெயபிரகாஷை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின்பேரில், ஜெயபிரகாஷ் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.