செய்திகள் :

போடி நகராட்சித் தலைவர் வீடு, கடைகளில் GST, ED, வருமானவரி மூன்று துறையினர் சோதனை - என்ன காரணம்?

post image

தேனி மாவட்டம் போடி நகராட்சி நகர் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி. இவருடைய கணவர் சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி 29ஆம் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர்களுடைய மகன் லோகேஷ் இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் தமிழகம்-கேரளா பகுதிகளில் ஏலக்காய் கொள்முதல் செய்து, வெளிமாநிலங்களுக்கு வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகை முன்பாக 300 டன் ஏலக்காய் போடி ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு சங்கர் மற்றும் அவருடைய மகன் லோகேஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

சங்கர், அவருடைய மனைவி ராஜராஜேஷ்வரி
சங்கர், அவருடைய மனைவி ராஜராஜேஷ்வரி

இவ்வாறு அனுப்பப்பட்ட ஏலக்காய் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் ஆவணங்கள் இல்லாமல் சென்ற ஏலக்காயை கைப்பற்றியதாகவும், அது குறித்த விசாரணை மேற்கொண்டதில் தொடர்ச்சியாக ஆவணங்கள் இல்லாமல் பல வருடங்களாக இதுபோன்று ஏலக்காய் வட மாநிலங்களுக்கு ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கர் வீட்டிற்கு வந்து விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்து சென்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராமல் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.

மகன் லோகோஷ்
மகன் லோகோஷ்

அதனைத் தொடர்ந்து நேற்று சங்கருக்கு சொந்தமான வீடு, ஏலக்காய் வர்த்தக குடோன், கேரளா - இடுக்கி மாவட்டம் கடுக்கன் சிட்டியில் உள்ள கடை மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்யத் தொடங்கினர். சங்கர், அவரது மனைவி ராஜராஜேஸ்வரி, மகன் லோகேஷ் மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் விசாரணைக்கு வரும் வரை சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் போடி பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்

இன்று மதுரையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின்.இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, 'TN ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்' கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ரூ.36,660.35 கோடி முத... மேலும் பார்க்க

``முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் ரூ.500 கோடி இல்லை'' - கிரிக்கெட் வீரர் சித்து மனைவி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய... மேலும் பார்க்க

அலுவலக நேரத்திற்கு பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை‌ முன்மொழிந்துள்ளார்.என்ன மசோதா?சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் - வேலை நேரத்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு' சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி-க்கு புகார் அளித்தது. அதன்படியில் புதுச்சேரி மேட்டு... மேலும் பார்க்க

சேலம்: ``தறி ஓட்டுனா பொண்ணு தரவே யோசிக்கிறாங்க'' - நிலைமையை சொல்லும் கைத்தறி நெசவாளர்கள்

சோறு எப்படி வருது என்று கேட்டால், இப்போதைய பிள்ளைகள் "வயலில் இருந்து வருது" என்று சொல்வது போல, நாம் உடுத்துகிற ஆடை எப்படி உருவாகிறது என்று கேட்டால், பலருக்கும் தெரியாது. நூல்களையெல்லாம் ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க