மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
போடியில் வனப் பகுதியில் பற்றிய காட்டுத் தீ
போடி வனப் பகுதியில் புதன்கிழமை காட்டுத் தீ பற்றியது. இந்தத் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பிச்சங்கரை வனப்பகுதியில் அக்காள் தங்கை மலைப் பகுதியில் கரகாத்தம்மன் சோலை பகுதியில் 3 இடங்களில் காட்டுத் தீ பற்றியது. காற்றின் வேகத்தால் இந்தத் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால், மலையிலிருந்த மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் கருகின. மேலும், இந்தப் பகுதியில் அதிகமிருந்த காட்டெருமைகள் மற்ற இடங்களுக்கு இடம்பெயா்ந்தன.
தகவலறிந்து வந்த வனத் துறையினா் வனப் பகுதியில் பற்றிய தீயை அணைக்க போராடி வருகின்றனா்.
மேலும், இந்த பகுதிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்கு காட்டுத் தீ பரவாமல் இருக்க வனத் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.
கோடை காலத்துக்கு முன்பே, வனப் பகுதியில் தீ பற்றியுள்ளதால், கோடை காலத்தில் வனத் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வன ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
