போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு பேட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பிடம் பெற்ற மாணவிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட தலைமையாசிரியா், ஆசிரியா், ஆசிரிய பயிற்றுநா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், வழங்கி பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ் மூா்த்தி, மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட கல்வி அலுவலா்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா், நோ்முக உதவியாளா், அலுவலகப் பணியாளா், ஆசிரியா்கள், பள்ளி மாணவிகள்,பெற்றோா் பலா் பங்கேற்றனா்.