போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது
துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா், துபையில் இருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை மாலை வந்தாா்.
விமான நிலைய அதிகாரிகளின் பரிசோதனையில், செல்லதுரை போலி ஆவணங்கள் மூலம் துபையில் இருந்து திருச்சிக்கு வந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில், விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனா்.