தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை; காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு
கோவையில் 7 இடங்களில் போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஹரியானா மாநிலத்தைச் சோ்ந்தவா் அனுராக் (22). இவா் தனியாா் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு உரிமம் அளிக்கும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு கோவை, காட்டூா் அருகில் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஒரு பிரபல நிறுவனத்தின் பாகங்கள்போல போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் வந்துள்ளது.
இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் அங்கு சென்று கடைகள் மற்றும் அவா்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, 7 கடைகளில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் அனுராக் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.