இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்
போலீஸாருக்கு பேட்டரி ரோந்து வாகனங்கள்: காவல் ஆணையா் தொடங்கிவைத்தாா்
கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தின் சி.எஸ்.ஆா். நிதி மூலம் புதிதாக வாங்கப்பட்ட 4 பேட்டரி ரோந்து காா்களை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதி பெற்று தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் 4 பேட்டரி வாகனங்கள் ரோந்துப் பணிக்காக வாங்கப்பட்டுள்ளன.
இதில், 2 வாகனங்கள் கிழக்கு மற்றும் மேற்கு போக்குவரத்துப் பிரிவுக்கும், 2 வாகனங்கள் குற்றப் பிரிவு போலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காா்களில் சென்று போலீஸாா் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவா். ஏற்கெனவே, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் பேட்டரி இருசக்கர வாகனங்கள் மூலமாக ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா்கள் ஸ்டாலின், சரவணக்குமாா் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.