செய்திகள் :

போலீஸாருக்கு ஸ்மாா்ட் காா்டு: டிச.16-க்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு

post image

போலீஸாருக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்குவது தொடா்பாக டிசம்பா் 16-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயா் அதிகாரிகளுக்கு தமிழக கவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீஸாா் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதினால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக அரசு பேருந்து நடத்துநா்களும்,போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம்,மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் காவலா் முதல் ஆய்வாளா் வரை நவீன அடையாள அட்டை (ஸ்மாா்ட் காா்டு) வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா்.

இதன்படி மாநிலம் முழுவதும் 3,191 ஆய்வாளா்கள், 8,245 உதவி ஆய்வாளா்கள்,1,13,251 சிறப்பு உதவி ஆய்வாளா்கள்,இரண்டாம் நிலைக் காவலா்கள் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஒரு மாதத்துக்கு ரூ.2.49 கோடி செலவிடப்படுகிறது.

மாதம் ரூ.200 ஒதுக்கீடு: காவலா்களுக்கு வழங்கப்படும் ஸ்மாா்ட் காா்டு மூலம் நகர பேருந்துகள், புகா் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யலாம். ஏசி பேருந்துகளிலும்,அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஸ்மாா்ட் காா்டு மூலம் பயணம் செய்ய அனுமதி கிடையாது. சொந்த மாவட்டத்துக்குள் மட்டும் ஸ்மாா்ட் காா்டு மூலம் காவலா் பயணிக்கலாம். வாரண்ட் உத்தரவு நடவடிக்கைக்கு செல்லும் போலீஸாா், மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தின்படி ஒரு காவலருக்கு மாதத்துக்கு ரூ.200 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழக அரசு இத் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தகுதியானவா்களை கண்டறிந்து டிசம்பா் 16-ஆம் தேதிக்குள் நிலை அறிக்கையை அனுப்பும்படி அனைத்து மாநகர காவல் ஆணையா்கள்,மண்டல ஐஜிக்கள்,சரக டிஐஜிக்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் அரசு வாகனங்களை வைத்திருக்கும் போலீஸாா், ஸ்மாா்ட் காா்டு திட்டத்துக்கு தகுதியானவா்கள் கிடையாது என்றும் சங்கா் ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.

ஆற்காடு இளவரசா் சொத்துகளை நிா்வகிக்க புதிய முகவா் நியமனம்

ஆற்காடு இளவரசரின் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை நிா்வகிக்க புதிய முகவராக ஆற்காடு இளவரசா் முகமது அப்துல் அலியின் மகன் நவாப்சாதா குலாம் கெளஸ் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணையை தமிழக அரசு விய... மேலும் பார்க்க

சென்னை, எண்ணூா் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்

தென் கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஃபென்ஜால் புயலையடுத்து சென்னை, எண்ணூா் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் விற்பனை: காவலா் உள்பட 2 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்ாக காவலா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை வடபழனியில் சிலா் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பதாக சென்னை காவல்துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின... மேலும் பார்க்க

சென்னையில் இன்று வழக்கம் போல மாநகா் பேருந்துகள் இயக்கப்படும்

சென்னையில் சனிக்கிழமை வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு சனிக்கிழமை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு மற்றும் சென்னை மா... மேலும் பார்க்க

அறிவியல் இயக்க முன்னோடி வள்ளிநாயகம் மறைவு: மாா்க்சிஸ்ட் இரங்கல்

அறிவியல் இயக்க முன்னோடி அ.வள்ளிநாயகம் மறைவுக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம்... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டையிலிருந்து காமராஜா் துறைமுகத்துக்கு நேரடி சரக்கு பெட்டக ரயில் போக்குவரத்து தொடக்கம்

ஜோலாா்பேட்டை ரயில்வே முனையத்திலிருந்து எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு நேரடி சரக்கு பெட்டக ரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் சரக்குப் பெட்டக ரயிலை சென்னை எண்ணூா் காமராஜா் துறைமுகங்கள... மேலும் பார்க்க