பொய் வழக்குப் போடும் போலீஸார் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை: உச்ச நீ...
ம.பி.யில் பாஜக, காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர் தம்பதி உள்பட நான்கு பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ம.பி.யின் சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான மனோஜ் பார்மர் மற்றும் அவரது மனைவி நேஹா பார்மர் ஆகியோரின் மீது ரூ. 6 கோடி கடன்மோசடி வழக்கில் , அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த எட்டு நாள்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து நேற்று (டிச.13) காலை இருவரது உடலும் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
தற்கொலை செய்துக்கொண்ட தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகளும், 16 மற்றும் 13 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், அவர்கள் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ம.பி. முதல்வர் ஆகியோரைக் குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் 5 பக்க கடிதத்தில், அமலாக்கத்துறையினர் அவர்களை மிகவும் மோசமான முறையில் நடத்தியதே தற்கொலைக்கான முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையக்கூறி அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்பதி இருவரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதினாலே அவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறப்படும் நிலையில், அவர்களின் குழந்தைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது தாங்கள் சேர்த்த உண்டிப் பணத்தை அவரிடம் கொடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தது அப்பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இதைப்போலவே, ம.பி.யின் சிந்தவராவில் எழுபது வயது பாஜக பிரமுகர் கன்ஹிராம் ரகுவன்ஷி மன உளைச்சல் காரணமாக தனது துப்பாக்கியால் சுட்டும் , குவாலியர் நகர காங்கிரஸ் பிரமுகர் அமர் சிங் மஹோர் தூக்கிட்டும் தற்கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் தற்கொலை செய்துகொண்டது மத்தியப் பிரதேச அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.