செய்திகள் :

'மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி, உள்துறை உட்பட 12 இலாகா' - பட்டியல் போடும் ஷிண்டே; தொடரும் இழுபறி

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள போதிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆளும் கூட்டணியான மஹாயுதி கட்சித் தலைவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று (நவம்பர் 28) இரவு சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஏக்நாத் ஷிண்டே, "அமித் ஷாவுடனான சந்திப்பு சாதகமாகவும், நன்றாகவும் இருந்தது. முதல்வர் பதவி தொடர்பாக மும்பையில் நடக்கும் மஹாயுதி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா எடுக்கும் முடிவுக்கு நான் தடையாக இருக்கமாட்டேன்'' என்றார்.

இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இன்று (நவம்பர் 29) மும்பையில் முக்கிய பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. இலாகா ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உள்துறை உட்பட 12 அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டார்.

ஏக்நாத் ஷிண்டே

ஆனால் உள்துறை அமைச்சகத்தை பா.ஜ.க வைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று மும்பையில் நடக்க இருக்கும் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊரான சதாராவிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் திரும்ப வந்த பிறகுதான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். சிவசேனாவிற்குக் கொடுக்கப்படும் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள ஏக்நாத் ஷிண்டே தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. தனது கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அப்பதவியைக் கொடுக்க முடிவு செய்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவியும் நிதித்துறையும் கொடுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக, தனது கட்சி ஆதரவு கொடுக்கும் என்று அஜித்பவார் குறிப்பிட்டு இருந்தார். புதிய அரசு வரும் 2ஆம் தேதி பதவியேற்கும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து சிவசேனா எம்.பி. தையரியசீல் மானே கூறுகையில், ''ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து மகாராஷ்டிரா அரசியலில் இருக்க முடிவு செய்துள்ளார். ஆனால் தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது. அமைச்சரவையில் முக்கிய இலாகா குறித்து கூட்டணித் தலைவர்கள் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இவ்விவகாரத்தில் இரண்டு நாளில் ஒரு தெளிவு கிடைக்கும்'' என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

ADMK: தொடர் சிக்கலில் எடப்பாடி பழனிசாமி | Rain Alert | Imperfect Show

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்... https://bit.ly/MadrasNallaMa... மேலும் பார்க்க

Adani: அதானி விவகாரம்.. ஆட்டம் காணும் நாடாளுமன்றம்!

கடந்த 2ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கூட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. 'அவையைச் சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், ஒரே நாடு ஒரே ... மேலும் பார்க்க

`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்’– குற்றச்சாட்டுகளை அடுக்கும் எதிர்க்கட்சிகள்; முதல்வர் சொல்வதென்ன?

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் மற்றும், குமரகுருபள்ளத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் ந... மேலும் பார்க்க

Sambhal Violence: "அமைதியும் நல்லிணக்கமும் வேண்டும்" - மசூதி ஆய்வை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பாலில் மசூதி இருக்கும் இடத்தில் முன்னதாக இந்து கோயில் இருந்ததாக இந்து மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். விசாரணை நீதிமன்றம் இந்த மனுக்கள் அடிப்ப... மேலும் பார்க்க

`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?

சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாடினார்.இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. ... மேலும் பார்க்க

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்: "ரத்து செய்க; மாநிலத்தின் அனுமதியின்றி..!"- மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில்,... மேலும் பார்க்க