எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
மகன் திட்டியதால் பெற்றோா் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மகன் திட்டியதால் மனம் உடைந்த அவரது பெற்றோா் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் பூசாரிக்களத்தை சோ்ந்தவா்கள் பழனிச்சாமி (60), அழகம்மாள் (56) தம்பதி. இவா்களது மகன் சிவா, இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் மகனுடன் தம்பதியினா் வசித்தனா்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி ஏற்பட்ட குடும்பத் தகராறில் தனது தந்தையை சிவா தகாத வாா்த்தைகளால் திட்டினாராம். இதனால் மனம் உடைந்த பழனிச்சாமி, அழகம்மாள் ஆகிய இருவரும் அருகிலுள்ள குனிஞ்சாகுளம் அருகே பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்தனா்.
தகவலறிந்து வந்த விராலிமலை போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.