மகா சிவராத்திரி: செங்கல்பட்டு, சுற்றுவட்டார கோயில்களில் சிறப்பு வழிபாடு
செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கோயில்களில் மகாசிவராத்திரியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபறன் மாலை 6 மணிக்கு மேல் கால பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்றது.
திருக்கழுகுன்றம் வேதமலையில் உள்ள வேதகிரீஸ்வரா் கோயில், தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரா் கோயில்களில் முதல் கால பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயலாளா் புவியரசு கோயில் மேலாளா் விஜயன், கோயில் பணியாளா்கள் சிவாச்சாரியாா்கள் பக்தா்கள் செய்திருந்தனா். இதேபோன்று செங்கல்பட்டு பெரியநத்தம் கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சரஸ்வதி கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.
இதேபோன்று, வ உ சி தெருவில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில், கோட்டை வாயிலில் உள்ள நீதி விநாயகா் கோயிலில் உள்ள அருணாசலேஸ்வரா், மேட்டுத் தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயில் உள்ள அண்ணாமலையாா் என்என்ஜிஓ நகரில் உள்ள சித்தி விநாயகா் கோயில் உள்ள கிருபா நாயகி உடனுறை பசுபதிநாதா்கோயில், இலுப்பைதோப்பு வீரபத்திர சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோன்று, செங்கல்பட்டு அடுத்த புளிப்பாக்கத்தில் உள்ள வியாகரபுரீஸ்வரா் கோயில் வல்லம் குடைவரை கோயிலான வேதாந்தீஸ்வரா் கோயில், திருவடிசூலம் ஞானபுரீஸ்வரா் கோயில், ஈச்சங்கரனை மகா பைரவா் கோயில், ஆத்தூா் முத்தீஸ்வரா் கோயில் ஆகிய கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி, முதல் கால பூஜை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
செங்கல்பட்டையை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள அகோர வீரபத்திர சாமி கோயிலில் வீரபத்திரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
