இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுப்பது விமர்சிக்கத்தக்கதே: ஐ.நா. கூட்டத்தில் இந...
மகா சிவராத்திரி: பெரம்பூர் சிவா விஷ்ணு கோயிலில் திரளானோர் சுவாமி தரிசனம்!
சென்னை பெரம்பூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவா விஷ்ணு கோயிலில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
சென்னை பெரம்பூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற சிவா விஷ்ணு கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இந்த சிவன் கோயிலில் முதல் கால பூஜை இரவு 10 மணி, இரண்டாம் கால பூஜை நள்ளிரவு 12 மணி, மூன்றாம் கால பூஜை பின்னிரவு 2 மணி, நான்காம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது.
முதல் கால பூஜையில் பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு, இளநீர், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சிவ பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஓம் நமசிவாய, சிவாய நம ஓம் எனப் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.