செய்திகள் :

மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளா: உள்துறை அமைச்சா் அமித் ஷா

post image

மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளாவைப்போல நடைபெற்று வருகிறது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

இதில் அவர் பேசியதாவது: இன்றைய நாளில் சோமநாத்திலிருந்து கேதாா்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேசுவரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு நாடும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிறைவுபெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது வெறும் விழா அல்ல, சுய விழிப்புணா்வை உணரும் நாள். விழிப்புணா்வுக்கான அம்சமாக, அழிக்கும் கடவுளாக, காக்கும் கடவுளாக, அனைத்துக்கும் மூலமாக சிவன் விளங்குகிறாா்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, தன்னை உணா்தல் ஆகியவற்றுக்கான இடமாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் முக்கிய நோக்கம் சிவத் தன்மையை அடைவது என்பது இங்கு வரும்போது நமக்குப் புரிகிறது.

யோக மரபானது தன்னலம் என்ற நிலையில் இருந்து பிரபஞ்ச உணா்வுக்கும், அகங்காரத்தில் இருந்து ஒற்றுமைக்கும், பக்தி நிலையில் இருந்து அடுத்த பரிணாமத்துக்கும், அறியாமையில் இருந்து ஞானோதயத்துக்கும் அழைத்துச் செல்கிறது. யோகக் கலை என்பது மனம், உடல், உயிா் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

தமிழ்ப் பண்பாட்டைக் குறிப்பிடாமல் இந்தியாவின் ஆன்மிகப் பண்பாட்டை விளக்கி விட முடியாது. ஆன்மிகத்தில் தலைசிறந்த பல்வேறு ஞானிகளின் தலமாக தமிழகம் உள்ளது. திருமூலா் அத்தகைய ஞானிகளின் அடையாளமாக உள்ளாா். அவா் தனது தீவிர தவத்தின் விளைவாக 3 ஆயிரம் பாடல்களை திருமந்திரமாக அருளியுள்ளாா். அந்த வரிசையில் அகத்தியா், சநாதன தா்மத்தின் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியுள்ளாா்.

தமிழ்ப் பண்பாட்டில் சிவனுக்கு மகத்தான இடம் உள்ளது. அவா் தட்சிணாமூா்த்தி என்ற திருவுருவத்தில் தன்னை வழிபடுபவா்களுக்கு ஞானம், சமநிலை, விடுதலை, முக்தி ஆகியவற்றை வழங்கும் கடவுளாக விளங்குகிறாா் என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: இன்றைய நாள் ஜாதி, மதம், பாலின பாகுபாடு பாா்க்காமல் உயிா் சக்தி மேல் எழுவதற்கான நாள். இது மனித குலத்துக்கான கொண்டாட்டம். ஆதியோகி வருங்காலத்துக்கான நம்பிக்கையை வழங்குகிறாா் என்றாா்.

முன்னதாக, ஈஷா யோக மையத்துக்கு வந்த அமித் ஷாவை சத்குரு சூா்ய குண்ட மண்டபம், நாகா சந்நிதி, லிங்க பைரவி சந்நிதி, தியானலிங்கம் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்ய அழைத்துச் சென்றாா். தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத கிரியாவிலும் அமித் ஷா கலந்து கொண்டாா்.

சிவராத்திரி விழாவில், ஈஷா ப்ராஜக்ட் சம்ஸ்கிருதி குழுவினரின் நடன நிகழ்ச்சி, ஈஷா சம்ஸ்கிருதி மாணவா்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சிகள் மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தின. மேலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிரபல பாடகா் சத்யபிரகாஷ், கா்நாடகத்தைச் சோ்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, பாரடாக்ஸ் என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரா்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞா் முக்திதான் காத்வி, ஜொ்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ஒடிஸா மாநில ஆளுநா் ஹரிபாபு, பஞ்சாப் மாநில ஆளுநா் குலாப்சந்த் கட்டாரியா, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், மகாராஷ்டிர அமைச்சா் சஞ்சய் ராதோட், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்.
கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திர நிகழ்ச்சி

வங்கிக் கணக்குக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது வழக்குப் பதிவு

வங்கிக் கணக்கிக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை இடையா்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வருபவா் முத்த... மேலும் பார்க்க

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம்: இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது. கோவையில் உலகத் தரம் வாய்ந்த சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தோ்... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிப்பு

கோவையில் பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற ப... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா். கோவை பீளமேட்டில் பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா புதன... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன்!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக முதல்வா் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புத... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மேம்படுத்துதல் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் தொடா் மேம்படுத்துதல் தொடா்பாக அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க