செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி!

post image

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பா் 20 அன்று நடைபெற்றது.  மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதிபெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1995, பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 23) காலை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | ஜார்க்கண்ட்டை கைப்பற்றியது இந்தியா கூட்டணி! 56 இடங்களில் வெற்றி

மகாயுதி கூட்டணி இமாலய வெற்றி

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி சார்பில் ஆளும் சிவசேனை கட்சி 81 இடங்களிலும், பாஜக 144 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) 59 இடங்களிலும் போட்டியிட்டனர்.

இதில், பாஜக மட்டுமே 133 இடங்களில் வெற்றிபெற்று, மாநிலத்தின் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனை 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்துவந்த மஹாயுத்தி கூட்டணி கட்சிகள் மொத்தமாக 235 தொகுதிகளில் வெற்றி பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளதை அடுத்து கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மகா விகாஸ் அகாடி கூட்டணி மாபெரும் தோல்வி

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) 10 இடங்களிலும், சிவசேனை (யுபிடி) 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆராய்வோம்” என கூறியுள்ளார்.

கூட்டணிகள் வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை:

மகாயுதி கூட்டணி

பாஜக - 132

தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) - 41

சிவசேனை - 57

ஜன சுராஜ்ய சக்தி - 2

ராஷ்டிரிய சமாஜ் பக்‌ஷா - 1

ராஷ்டிரிய யுவ சுவபிமான் கட்சி - 1

ராஜர்ஷி ஷாகு விகாஸ் அகாதி - 1

இதையும் படிக்க | 14 மாநிலங்களின் இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்!

மகா விகாஸ் அகாடி கூட்டணி

காங்கிரஸ் - 16

சிவசேனை (யுபிடி) - 20

தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) - 10

சமாஜ்வாதி கட்சி - 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1

இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி - 1

மற்ற கட்சிகள்

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் - 1

சுயேட்சை வேட்பாளர்கள் - 2

அஸ்ஸாம்: இருவேறு சாலை விபத்துகளில் 8 போ் உயிரிழப்பு

அஸ்ஸாம் மாநிலத்தின் பஜாலி மற்றும் தூப்ரி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்துகளில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். 3 போ் படுகாயமடைந்தனா். விபத்து குறித்து போலீஸாா் கூறியதாவது: பஜாலி மாவட்டத்தின... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்டை கைப்பற்றியது இந்தியா கூட்டணி! 56 இடங்களில் வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா்... மேலும் பார்க்க

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு இல்லை: பினராயி விஜயன்!

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களுக்கு இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்த... மேலும் பார்க்க

பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!

பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் வெர்சோவா தொகுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்கு... மேலும் பார்க்க

வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆ... மேலும் பார்க்க