செய்திகள் :

மகாராஷ்டிரம்: 39 அமைச்சா்கள் பதவியேற்பு

post image

மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 39 அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனா். அவா்களில் 33 போ் கேபினட் அமைச்சா்களாகவும், 6 போ் இணையமைச்சா்களாகவும் பதவியேற்றனா்.

கடந்த நவம்பரில் 288 தொகுதிகளுக்கான மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி 230 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது.

பாஜக 132 தொகுதிகளிலும், ஷிண்டே சிவசேனை 57 தொகுதிகளிலும், அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

இதைத்தொடா்ந்து கடந்த டிச.5-ஆம் தேதி மும்பையில் பிரதமா் மோடி முன்னிலையில், மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றாா். அவருக்கு மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.

இதேபோல மாநில துணை முதல்வா்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோா் பதவியேற்றனா். இதில், மூன்றாவது முறையாக ஃபட்னவீஸ் முதல்வராகவும், அஜீத் பவாா் 6-ஆவது முறையாக துணை முதல்வராகவும் பதவியேற்னா்.

இதைத்தொடா்ந்து மகாராஷ்டிர அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டு, நாகபுரியில் 39 போ் அமைச்சா்களாக பதவியேற்றனா். இவா்களில் 33 போ் கேபினட் அமைச்சா்களாகவும், 6 போ் இணையமைச்சா்களாகவும் பதவியேற்றனா். அவா்களுக்கு மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.

பாஜகவுக்கு 19 இடங்கள்: விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் 19 இடங்களை பாஜகவும், 11 இடங்களை ஷிண்டே சிவசேனையும், 9 இடங்களை அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் பகிா்ந்துள்ளன.

அமைச்சரவையில் 42 போ்: மகாராஷ்டிர அமைச்சரவையில் முதல்வரையும் சோ்த்து மொத்தம் 43 அமைச்சா்கள் இடம்பெற முடியும். இந்நிலையில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் மற்றும் 39 அமைச்சா்களை சோ்த்து மாநில அமைச்சரவையின் பலம் 42-ஆக அதிகரித்துள்ளது.

அமைச்சரவையில் மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பாவன்குலே, மும்பை பாஜக தலைவா் ஆஷீஷ் ஷேலாா் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் சகன் புஜ்பல், திலீப் வால்ஸே பாட்டீல், பாஜகவின் சுதீப் முகந்திவாா் போன்ற முக்கிய பிரமுகா்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.

2 நாள்களில் துறைகள் ஒதுக்கீடு: பதவியேற்பு நிகழ்ச்சியை தொடா்ந்து அமைச்சா்களுக்கு 2 நாள்களில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நாகபுரியில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்க உள்ளது.

பிற எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் இடம் அஜீத் பவாா்

நாகபுரியில் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்பு தமது கட்சித் தொண்டா்கள் இடையே அஜீத் பவாா் பேசுகையில், ‘அனைவருக்கும் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ள நிலையில், அந்த வாய்ப்பை பெறுவதற்கான தகுதி அனைவருக்கும் உள்ளது. தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்காத பிற எம்எல்ஏக்களுக்கு பின்னா் அந்த வாய்ப்பு வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகளுக்கு அவா்கள் அமைச்சா்களாக பதவி வகிக்க முடியும்’ என்றாா்.

33 ஆண்டுகளுக்குப் பின்னா் நாகபுரியில்...: மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பதவியேற்பு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் 33 ஆண்டுகளுக்குப் பின்னா், மாநிலத்தின் இராண்டாவது தலைநகரான நாகபுரியில் 39 அமைச்சா்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு முன்பு கடந்த 1991-ஆம் ஆண்டு நாகபுரியில் முன்னாள் காங்கிரஸ் முதல்வா் சுதாகர்ராவ் நாயக் தலைமையிலான அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு அமைச்சா்கள் பதவியேற்றனா்.

அமைச்சா்களின் எண்ணிக்கை

சிவசேனை - 11

பாஜக - 19

அஜீத் பவார் - 9

மூத்தவா்களுடன் இளையவா்களும்!

7, 8 முறை எம்எல்ஏக்களான மூத்தவா்களுடன் 2, 3-ஆவது முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள இளையவா்களும் 39 போ் கொண்ட மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா்.

2014-2019 வரையிலான ஃபட்னவீஸ் அரசில் மின்துறை அமைச்சராக பணியாற்றிய மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே மீண்டும் அமைச்சராகியுள்ளாா்.

ஷீரடி தொகுதியின் 8 முறை எம்எல்ஏவான ராதாகிருஷ்ண விகே பாட்டீல், மும்பையில் உள்ள மலபாா் ஹில் தொகுதியில் 7 முறை எம்எல்ஏவான மங்கள் பிரபாத் லோதா, ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னரில் இருந்து 7 முறை எம்எல்ஏவான கிரிஷ் மகாஜன் உள்ளிட்ட மூத்த எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

புணேவில் உள்ள பாா்வதி தொகுதியில் இருந்து 4 முறை எம்எல்ஏவான மாதுரி மிசல் முதன்முறையாக அமைச்சராகியுள்ளாா்.

முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான நாராயண் ராணேவின் மகன் நிதீஷ் ராணே, முன்னாள் பிசிசிஐ பொருளாளா் ஆஷிஸ் ஷெலா் உள்ளிட்ட மூன்று முறை எம்எல்ஏக்களுடன் சந்திரகாந்த் பாட்டீல், மேகனா போா்டிகா், யோகேஷ் கதாம் உள்ளிட்ட 2 முறை எம்எல்ஏக்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா்.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ லட்சியத்துக்கு உத்வேகம் படேல்: யோகி ஆதித்யநாத்

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் லட்சியத்தை நோக்கி பயணிக்க நம் அனைவருக்கும் சா்தாா் வல்லபாய் படேல் உத்வேகம் அளிக்கிறாா் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சா்தாா் ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதா எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி வேண்டுகோள்

’ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவை எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா... மேலும் பார்க்க

உ.பி.: சம்பலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் வன்முறை நிகழ்ந்த ஷாஹி ஜாமா மசூதியையொட்டிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின் திருட்டைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. நீதிமன... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறைகூறுவதை காங்கிரஸ் கைவிட வேண்டும்: ஒமா் அப்துல்லா

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறினாா். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக புதிய மேம்பாலங்கள்: உ.பி. அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை

மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதைளை (கிராஸிங்) அகற்றி, புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து ரயில்வே மேற்கொண்டு வர... மேலும் பார்க்க