கைதி, சொர்க்கவாசல் படத்துக்கு தொடர்பிருக்கிறதா? லோகேஷ் கனகராஜ் பதில்!
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: மகாராஷ்டிரத்தில் 96 தொகுதிகளில் பாஜக முன்னிலை
மும்பை: மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 96 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள் முதலில் தபால் வாக்குகளை சரிபார்த்து எண்ணத் தொடங்கினர், அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதையும் படிக்க |மேற்கு வங்க இடைத்தேர்தல்: 6-ல் 3 தொகுதிகள் திரிணமூல் முன்னிலை!
மகாயுதி கூட்டணி முன்னிலை
மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 96 தொகுதிகளிலும், மகா விகாஸ் அகாடி கூட்டணி 35 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
ஜார்க்கண்ட் பாஜக கூட்டணிமுன்னிலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணி 35 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 31 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
கேரள மாநிலம், வயநாடு மக்களவை இடைத்தேர்தல், பாலக்காடு பேரவைத் தொகுததி, கர்நாடகாவின் சென்னபட்டணா பேரவைத் தொகுதி உள்ளிட்ட இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளும் சனிக்கிழை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
பிரியங்கா காந்தி முன்னிலை
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 23,464 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அடுத்தடுத்த இடங்களில் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி இருந்து வருகின்றனர்.